விருதுநகரில் செவிலியர் பயிற்சி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் பெண் சிசுக்கொலை, பெண் கருகலைப்பு மற்றும் பாலினத் தேர்வு தடைச்சட்டம் ஆகியவைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு
Updated on
1 min read

விருதுநகர் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் பெண் சிசுக்கொலை, பெண் கருகலைப்பு மற்றும் பாலினத் தேர்வு தடைச்சட்டம் ஆகியவைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.அ.பிரகலாதன் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவர் ந.அன்புவேல் முன்னிலை வகித்தார். இதில், மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை இயக்குநர் மு.கதிரேசன் பங்கேற்று செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், பெண் சிசுக்கொலை, பாலினத் தேர்வு தடைச் சட்டம் மற்றும் பெண் கருக்கலைப்பு தடுப்பு ஆகியவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தொடங்கி, ராமமூர்த்தி சாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர். இதில், செவிலியர் பயிற்சி பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com