விருதுநகர் அருகே 3 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை வாகனத்தில் கடத்திச் சென்றதாக 2 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் - மாத்தநாயக்கன்பட்டி சாலை வழியாக வாகனங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலையில் சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் போலீஸார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சூலக்கரை-மாத்தநாயக்கன்பட்டி சாலையில் வந்த வாகனம் போலீஸாரை பார்த்ததும் திடீரென திரும்பி செல்ல முயன்றனர். அதற்குள், பின்தொடர்ந்து சென்ற போலீஸார் சுற்றி வளைத்து வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்குகளில் வெள்ளைத்தாள் சுற்றிய நிலையில் 3000 கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.60ஆயிரம் ஆகும்.
அதையடுத்து, அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள கட்டனம்செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி(50), நாராயணசாமி(55) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு கைது செய்தனர். அதையடுத்து, கருந்திரி கட்டுக்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

