விருதுநகர் அருகே தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி ஒருவர் சாவு

விருதுநகர் அருகே தனியார் தீ்ப்பெட்டி தொழிற்சாலையில் மருந்து உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே தனியார் தீ்ப்பெட்டி தொழிற்சாலையில் மருந்து உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பாண்டியன்நகரை அடுத்த முத்தால்நகரில் சிவராம் என்பவருக்கு சொந்தமான தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.இந்த ஆலையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் தீப்பெட்டி குச்சிகளுக்கு மருந்து முக்கி எடுத்து காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது, தீக்குச்சி மருந்துகளுக்கு இடையே உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் பவுன்ராஜ்(55), பேச்சியம்மாள்(35) மற்றும் பாண்டி(45) ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

பின்னர் தீக்காயம் அடைந்த தொழிலாளர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகி்சசை பெற்று வந்தனர். அதில், அப்பகுதியில் உள்ள முத்துராமன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் தீப்பெட்டி தொழிற்சாலையின் உரிமையாளர் சிவராம் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com