விருதுநகர் அருகே பெண்ணை மானபங்கம் செய்தவர் கைது 

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் அருகே உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி(32). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் அருகே உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி(32). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றார்.தற்போது, இப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அப்போது, இவருக்கும் இதே ஆலையில் பணியாற்றி வரும் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவசிராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை மானபங்கம் செய்தாராம்.

தற்போது, ஆதிலட்சுமி கர்ப்பமாக உள்ளதால் திருமணம் செய்யும்படி தவசிராஜனிடம் கூறியதை தொடர்ந்து மறுத்து வந்தாராம். உடனே இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதிலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் தவசிராஜன் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com