விருதுநகர் அருகே கார் பைக் மீது மோதியதில் ஊராட்சி தலைவர் சாவு

விருதுநகர் அருகேயுள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி(62). தற்போது, இவர் இக்கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது  மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஊராட்சி தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி(62). தற்போது, இவர் இக்கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் சாத்தூரிலிருந்து தனது  கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தாரம். அப்போது, அவர் வெங்கடேஸ்வரபுரம் 4 வழிச்சாலை பால இறக்கத்தில் சென்ற போது , கோவில்பட்டியிலிருந்து-விருதுநகர் நோக்கி பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஊராட்சி தலைவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆல்வின் ஞானராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com