விருதுநகர் அருகே சிறுமி திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்
Updated on
1 min read

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் குறிப்பிட்ட வயதை அடையாத சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் உடனே ஆய்வு செய்ய சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, உடனே சமூக நலத்துறை அலுவலர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வியாழக்கிழமை திருத்தங்கல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு முத்து என்பவரின் மகள் சித்ரா(17) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான உறவினர் ஆண்டனி(22) ஆகியோருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு சென்ற அதிகாரிகள் திருமணம் ஆகும் பெண்ணுக்கு வயதுக்கான சான்றிதழை காண்பிக்கும் படி கூறியுள்ளனர். அப்போது, சிறுமி 6-ம் வகுப்பு வரையில் படித்து விட்டு இடை நிறுத்தம் செய்துள்ள விவரம் தெரியவந்து. மேலும், அரசு விதிமுறைப்படி திருமணத்திற்கான வயதை அடையாததது குறித்து இருவீட்டாரிடமும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட வயதை அடைந்ததும் திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்யும் படி கூறி உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். பின்னர், சிறுமி சித்ராவை விருதுநகர் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி கவுன்சிலிங் கொடுப்பதற்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com