விருதுநகர் அருகே இளம்பெண் தீக்குளித்து சாவு 

விருதுநகர் அருகே மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி முருகேஸ்வரி(28). இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தும் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனநிம்மதியை இழந்த முருகேஸ்வரி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீக்குளித்தாராம்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும் பலனில்லாமல் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பெண்ணின் தாயார் காளீஸ்வரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com