விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
Updated on
1 min read

விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

விருதுநகர் அருகே பெத்தனாட்சிநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(58). இவர் விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றராவார்.

இவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு வியாழக்கிழமை மாலையில் இவரது மனைவி ராஜசுந்தரி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் வந்துள்ளனர். அப்போது,  ராஜசுந்தரி பேரில் இருக்கிற சொத்தை எல்லாம் எழுதி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.

இது தொடர்பாக முத்துச்சாமி விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மனைவி ராஜசுந்தரி, மைத்துனர்களான ரவி, ராஜதுரை மற்றும் உறவினர் ராஜ் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com