விருதுநகர் மாவட்டத்தில் பிப்.22 தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 22-ம் தேதி 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு 1068 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 22-ம் தேதி 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு 1068 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 1 வயது குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜன.18ம் தேதியும், பிபி.22-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைத்து பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களில் 1068 மையங்கள் அமைத்து 1.64 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களில் 61 ஆயிரத்து 333 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 17 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.    மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், ஊட்டச்த்து மையம், பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் வழங்கப்பட இருக்கிறது.

இப்பணியில் மொத்தம் 4452 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 31 நடமாடும் குழுக்கள் அமைத்து அகதிகள் முகாம், நரிக்குறவர்கள், தாற்காலிகமாக குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழா நடைபெறும் இடங்கள், திருமண அரங்குகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 41 குழுக்கள் அமைத்து வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com