விருதுநகர் அருகே இளம்பெண் மாயம்: தந்தை புகார்

விருதுநகர் அருகே சூலக்கரை நடுத்தெருப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி திவ்யாதேவி(22). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஓராண்டுக்குள் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண் காணவில்லையென சூலக்கரை காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே சூலக்கரை நடுத்தெருப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி திவ்யாதேவி(22). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஓராண்டுக்குள் கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கணவரை பிரிந்து குல்லூர்சந்தையில் தனது தந்தையின் வீட்டில் குடியிருந்து வருகிறார். இங்கிருந்து நாள்தோரும் சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் வழக்கம் போல் வீட்டில் தூங்கியுள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்க்கையில் திவ்யாதேவியை காணவில்லையாம். பின்புறமாக எழுந்து சென்று பார்க்கும் கதவு திறந்து கிடந்துள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்துள்ளார். திவ்யாதேவி குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லையாம். இது தொடர்பாக விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் தந்தை கணேசன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன திவ்யாதேவி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பாலிடெக்னிக் மாணவர் மாயம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பழனிவேல்(42) என்பவரின் மகன் அருண்குமார்(17). இவர் விருதுநகர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறராம். இந்நிலையில் விடுமுறை நாளுக்கு  ஊருக்கு வந்துள்ளார். அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை  பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றாராம். ஆனால் அங்கு வரவில்லையென தகவல் வரவே நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் வீடுகளில் விசாரித்தும் அருண்குமார் எங்கிருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லையாம். இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் பழனிவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி மாயமான மாணவர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com