விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் 2 முதியவர்கள் சாவு

விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள்(50). இவரது கணவர் கணேசன்(60). இக்கிராமத்தில் இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில
Updated on
1 min read

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள்(50). இவரது கணவர் கணேசன்(60). இக்கிராமத்தில் இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்க செல்ல முடியாத நிலையிருந்தது.

இதனால், வீட்டிற்குள்ளாயே முடங்கி கிடக்க வேண்டியதால் மன நிம்மதியை இழந்த தவித்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்தி மயங்கி விழுந்து கிடந்தாராம். இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்களாம். அங்கு, அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனில்லாமல் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது மனைவி முனியம்மாள் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூக்கிட்டு முதியவர் சாவு:

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பாரெட்டி(65). இவர் ஏற்கனவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதையடுத்து, விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் சரியாகவில்லையாம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உத்திரத்தில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது தொடர்பாக அவரது மகன் பாண்டியன்(23) சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com