விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி நிவாரணத் தொகை பெற்றுக்கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 2012-13ம் ஆண்டில் ராபி பருவத்தில்(1.10.2012 முதல் 3.3.2013 வரையில்) பருத்தி, மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, கடலை, சோளம் மற்றும் சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் மூலம் பயிர் காப்பீடு பிரிமியம் தொகை செலுத்திய கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகையாக ரூ.5 கோடியே 84 லட்சத்து 36 ஆயிரத்து 840 மட்டும் வரப்பெற்றுள்ளது.
எனவே மேற்படி பருவத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தவணைத் தொகை செலுத்தி, கடன் பெறாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட அந்தந்த பகுதி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.