தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் வட்டக்கிளையின் 5-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அச்சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் திருக்குமார் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் எம்.ஹபிப் அப்துல்லா முன்னிலை வகித்தார். வட்டக்கிளை தலைவர் எஸ்.குருசாமி சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார்.
இதில், பல்வேறு துறைகளில் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.லட்சுமிநாராயணன், அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வைரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக எஸ்.குருசாமி, செயலாளராக ஆர்.நடராஜன், பொருளாளராக எஸ்.ராஜசேகன், துணைத் தலைவராக எஸ்.விஜயராகவன், இணைச் செயலாளராக எஸ்.அஷ்டராஜன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.