வரதட்சிணை கொடுமை: கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

அரியலூர் அருகே  உள்ள கீழக்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின்(29). இவருக்கும், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பிரகாஷ் நகரைச்சேர்ந்த கீதாவுக்கும்(33) கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம்
Updated on
1 min read

அரியலூர் அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் அருகே  உள்ள கீழக்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின்(29). இவருக்கும், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பிரகாஷ் நகரைச்சேர்ந்த கீதாவுக்கும்(33) கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் லெனின் ஈரோட்டுக்கு பணிபுரிவதற்காக சென்று விட்டார்.

இந்நிலையில் கீழக்கொளத்தூரில் வசித்து வந்த கீதாவிடம் அவரது மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சேர்ந்து 10 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இது குறித்து கீதா தனது கணவர் லெனினிடம் கூறியபோது அவரும் வரதட்சிணை வாங்கி வருமாறு வற்புறுத்தினாராம்.

இது குறித்து கீதா அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் மலர்க்கொடி, கீதாவின் கணவர் லெனின், மாமியார் சரஸ்வதி(58), உறவினர்களான சாந்திசுதாதேவி(42), இனியவன்(33),மணிமேகலை(60), குணசேகரன்(65) ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com