மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடி குண்டு மிரட்டல்

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து,வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நீதிமன்றப்பணிகள்  பாதிப்புக்குள்ளானது.
Updated on
1 min read

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து,வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த நீதிமன்றப்பணிகள்  பாதிப்புக்குள்ளானது.

மயிலாடுதுறை நீதிமன்றம்,குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு(எண்-1)மயிலாடுதுறை வட்டம், நீடூர் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டிருந்த ஒரு உறையிடப்பட்ட கடிதத்தில், 25-2-2015 காலை 10.30 மணிக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பயங்கரமான வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.   

இவ்வாறு எழுதப்பட்டிருந்த கடிதம் வெள்ளிக்கிழமை(பிப்-27)காலை 10.30 மணியளவில்  நீதிபதி கையில் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தினுள்  பணியில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மன்றத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து நீதித்துறை நடுவர் எம்.தங்கமணி கணேசன் மயிலாடுதுறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர்உதவிக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமணி தலைமையில் 30-க்கு மேற்பட்ட போலீஸார் உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு,பரிசோதனை செய்யப்பட்டதில்,வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போஸீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்த மிரட்டல் கடிதத்தால் நீதிமன்றம் உள்ள மகாதானத்தெரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.நீதி மன்றப்பணிகளும் பாதிப்புக்குள்ளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com