விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2, 10-ம் வகுப்பு போதுத்தேர்வுக்கான பணிகள் மும்முரம்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு மார்ச் 5-ம் முதல், தொடர்ந்து 31-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்தில் 192 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 75 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுத இருக்கின்றனர். இதில்,அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்-7,192 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில்-7,311 பேரும் மற்றும் விருதுநகர் கல்வி மாவட்டத்தில்-7,822 பேரும் என மொத்தம் 22,325 மாணவ, மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

இதற்காக 3 கல்வி மாவட்டங்களில் 10 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மாணவ, மாணவிகள் துண்டுச் சீட்டுக்கள் மூலம் பார்த்து எழுவதை தடுக்க செய்கைகள் அனைத்தும் மேற்பார்வையாளர்களின் பார்வைக்கு படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல், வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு மணிநேரத்திற்குள் சென்று சேரும் வகையில் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக காலையில் விநியோகிக்க காவலர்கள் பாதுகாப்புடன் 16 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தேர்வு முடிந்ததும் வினாத்தாள் கட்டுக்கள் அனைத்தையும் அதே வாகனம் மூலம் சேகரித்து இம்மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் 3 மையங்களில் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு மார்ச்-19-ம் தேதி முதல், ஏப்.10-ம் தேதி வரையில் 98 மையங்களில் இத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9685 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தி்ல் 9673 பேரும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 11352 பேரும் என மொத்தம் 30710 மாணவ, மாணவிகள் எழுத இருக்கின்றனர். இத்தேர்வுக்கான நுழைவு சீட்டுக்கள் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் விநோகிக்கவும்,  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தைக்கப்பட்டு தயாராக உள்ளன. மேலும், இதற்கான பணிகள்  மும்முரமாக நடந்து வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com