அரியலூர் மாவட்ட அதிமுகவின் உள்கட்சி தேர்தல் சனிக்கிழமை(பிப்.28) வரை நடைபெறுகிறது.
இது குறித்து அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்ட அஇஅதிமுக கிளைக்கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், மற்றும் வார்டு கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகளுக்கான அமைப்புத் தேர்தல், அரியலூர் ஒன்றியம், மற்றும் நகரத்துக்கு ஜயங்கொண்டம் சாலையில் உள்ள ஐஎம்ஏ திருமண மண்டபத்திலும், திருமானூர் ஒன்றியத்துக்கு கீழப்பழூவூர் ஆர்.எஸ். திருமண மண்டபத்திலும், தா.பழூர் ஒன்றியத்துக்
தா.பழூர் ராஜா திருமண மண்டபத்திலும், ஜயங்கொண்டம் ஒன்றியத்துக்கு ஜயங்கொண்டம் அமீர் திருமண மண்டபத்திலும், ஜயங்கொண்டம் நகரத்துக்கு வாசவி திருமண மண்டபத்திலும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு ஸ்ரீசாமுண்டீஸ்வரி திருக்கோயில் திருமண மண்டபத்திலும், உடையார்பாளையம் நகரத்துக்கு திருவள்ளுவர் திருமணமண்டபத்திலும், வரதராஜன்பேட்டை நகரத்துக்கு ஆண்டிமடம் ஸ்ரீசாமுண்டீஸ்வரி திருக்கோயில் திருமண மண்டபத்திலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்தத் தேர்தல் பிப்.28 ஆம் தேதி தொடங்கி மார்ச் 3 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.