108 வைணவத் திருத்தலங்களில் 23-வது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும், ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிந்தராஜப்பெருமாளுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்திஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் பூதேவி, ஸ்ரீதேவி,ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.