விருதுநகர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவர், மாமியார் உள்ளிட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே முத்துராமன்பட்டி சிவந்திபுரம் தெருவைச் சேர்ந்த வேல்ராமின் மகள் சக்திபூர்ணிமா(30). இவருக்கும் ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த அன்பழகனின் மகன் முத்துமுருகனுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, 35 சவரன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டதாம். இதைத் தொடர்ந்து திருமணமான இரண்டு மாதத்திலேயே நகை, ரொக்கத்தையும் முத்துமுருகனின் குடும்பத்தினர் வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இதையடுத்து கணவர் சென்னைக்குச் வேலைக்குச் சென்ற நிலையில், விருதுநகரில் மாமியார் விஜயா வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, ஒவ்வொரு நாளும் கூடுதலாக வரதட்சணை வேண்டும் எனக் கூறி மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் சித்ரவதை செய்துள்ளனர். இதற்கு கணவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நகை பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பெண்ணின் தந்தையார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தாராம். இதை விசாரணை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் சக்திபூர்ணிமாவின் கணவர் முத்து முருகன், அவரது தாய்மாமா பாக்யம், தாய் விஜயா, சகோதரி சாந்தி ஆகியோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.