வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆம்பூரில் ரயிலில் சிக்கி 10 காட்டுபன்றிகள் சாவு

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன.  புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு

Updated On :7 ஜனவரி 2015, 12:09 pm

ஆம்பூரில் புதன்கிழமை அதிகாலை ரயில் தண்டவாளத்தை கடந்த 10 காட்டுபன்றிகள் ரயிலில் சிக்கி இறந்தன.

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன.  புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது ஆம்பூரில் இருந்து காட்பாடி வழியாக சென்ற ஒரு ரயிலில் 10 காட்டு பன்றிகள் சிக்கி இறந்தன.   அவ்வழியாக சென்ற சிலர் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு வந்த வன ஊழியர்கள் பன்றிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னிகாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் பிரேத பரிசோதனை செய்தார்.

பின்னர், பன்றிகளின் சடலங்கள் அருகில் உள்ள கம்பிகொல்லை பகுதியில் இயங்கி வரும் வனச்சரக நர்சரி வளாகத்தில் எரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.