சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த தீர்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கட்டுமான பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் கட்டுமான தொழில் சரிவடையும் நிலையிருக்கிறது. ஒரே மாதத்திற்குள் சிமெண்ட் மூடை விலை ரூ.330 லிருந்து ரூ.380 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் தவறிவிட்டன. அதனால் உடனே சரி செய்வதற்கு தீர்வுக்குழுக்கள் அமைக்க வேண்டும். இதில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். அம்மா திட்டத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. மாநில அளவில் மாதத்தின் தேவை 68 லட்சம் மெட்ரிக் டன்னில், 34 லட்சம் மெட்ரிக் டன் பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மீதமுள்ள 34 மெட்ரிக் டன் மட்டுமே நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, செயல்படுத்தப்படும் அம்மா திட்டத்தின் சிமெண்ட் மூலம் மாநில அளவில் மொத்தம் 6 சதவீத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எஞ்சிய சிமெண்ட்களை அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, அம்மா திட்டத்தில் சிமெண்ட்கள் வாங்க வேண்டுமானால் பல்வேறு வகையான ஆவணங்கள் தயார் செய்ய வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மூலப்பொருள்கள் ஆகியவை விலை குறைந்துள்ள நிலையில், சிமெண்ட் எதன் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.