விருதுநகரில் பகுதியில் மருந்தகங்களை கண்காணிக்க 10 குழுக்கள் அமைப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் மருந்தகங்களை தொடர்ந்து  கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் மருந்தகங்களை தொடர்ந்து  கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இக்குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் தன்னிச்சையாக வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளன. அவ்வாறு வழங்கும் மருந்தகங்களை ஆய்வு செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்   தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு குழுவிலும்  உதவி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் 3 அலுவலர்கள் என ஆய்வில் ஈடுபடுவார்கள். இவர்கள் ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்குத்தான மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா அல்லது தன்னிச்சையாக வழங்குகிறார்களா என்பதை பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்வார்கள். அதன் பேரில் மருந்தகங்கள் தவறு செய்தது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com