விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 7 போலி மருத்துவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததில் போலி மருத்துவர்களை ராஜபாளையம், தளவாய்புரம் பகுதியில்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததில் போலி மருத்துவர்களை ராஜபாளையம், தளவாய்புரம் பகுதியில் போலீஸார் 7 பேரை கைது செய்தனர்.

இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொடர்பாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை இயக்குநர் கதிரேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்தது குறித்து ஆய்வு செய்த போது, அவர்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த விவரம் தெரியவந்தது. அதையடுத்து, காய்ச்சல் அதிகமாகவே உடனே போலி மருத்துவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளதுள்ளனர்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவத்துறையினருடன் இணைந்து காவல் துறையினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். அதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(60), அலெக்ஸாண்டர்(45), கமலநாதன்(47), பாலா(35), தளவாய்புரத்தைச் சேர்ந்த ராமசாமி(60), ஜெயக்குமார்(35) மற்றும் பாலகிருஷ்ணன்(35) ஆகிய 7 போலி மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்துள்ளனர் என்பதை கண்டறிந்து உடனே போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையில் போலி டாக்டர் 2 பேர் கைது: இதைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் மருத்துவத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மகன் நல்லதம்பி(44). இவர் தேரடி வீதியில் மருந்தகம் நடத்தி வருகிறாராம். அப்போது, நோயாளிகளிடம் சித்த மருத்துவர் எனக் கூறி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அதேபோல், இதேபகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் மோகன்ராஜ்(41). டி.பார்ம் முடித்து மருந்தகம் நடத்தி வருகிறராம். அதோடு நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்துள்ளார். எனவே விதிமுறைகளை மீறி சிகிச்சை அளித்தது தெரியவந்ததால் 2 பேரையும் அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com