விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் ஊழியர் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை
விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் ஊழியர் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் கோட்டச் செயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். இதில், ரயில்வே தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-வது சம்பள ஊதிய குழுவை நியமிக்கவும் மற்றும் ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 86 ஆண்கள் உள்பட 100 பேர் வரையில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com