அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தந்தை, மகள் விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சட்டக்கல்லூரி மாணவி

News image
Updated On :12 ஜனவரி 2015, 1:19 pm

விருதுநகரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சட்டக்கல்லூரி மாணவி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் நந்தினி. இவர்  சட்டக்கல்லூரி மாணவியாவர். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தையும், மகளும் சைக்கிளில் சென்று மது பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சைக்கிளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய பதாகைகளுடன் விருதுநகருக்கு திங்கள்கிழமை வந்தனர். அதையடுத்து, இப்பகுதியில் கச்சேரி சாலை, பஜார், தந்தி மரத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சைக்கிளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

     மேலும், இது குறித்து சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறுகையில், விருதுநகர் பகுதியில் திங்கள்கிழமை மது ஒழிப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் மதுவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். அதையடுத்து வருகிற 26-ம் தேதி குடியரசு தினவிழா அன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தி்ல் தனது தந்தையுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.