தமிழக மக்களுக்கு இராமதாஸ் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்து

உழவர் திருநாளான பொங்கல் பெருவிழாவும், தமிழ் புத்தாண்டும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று உற்சாகத்துடன்
தமிழக மக்களுக்கு இராமதாஸ் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்து
Published on
Updated on
1 min read

உழவர் திருநாளான பொங்கல் பெருவிழாவும், தமிழ் புத்தாண்டும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் தமிழ் சொந்தங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என சட்டம் கொண்டு வந்து தமிழர் கலாச்சாரத்தை திரிக்க ஆட்சியாளர்கள் முயன்றாலும், ‘தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு’ என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி தை முதல் நாளையே நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.

அதேபோல் அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான். அதனால் தான் இந்த திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயரும் உருவானது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் வீடுகளில் தோரணம் கட்டி,புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு படைத்து மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்துமே  இனிப்பை பிரதிநிதித்துவப் படுத்துபவை ஆகும். ஆனால், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் இந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு கசப்பே பரிசாகக் கிடைத்திருக்கிறது.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், தை பிறக்கும் இந்த நேரத்தில் பாட்டாளிகளுக்கு வழி பிறந்துள்ளது. இனிவரும் நாட்களில் மகிழ்ச்சியான செய்திகள் அணிவகுக்கும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இலாபம் தரும் உழவுத் தொழில், குடிசைகள் இல்லாத மாநிலம், ஏழ்மையில்லா தமிழகம், மதுவில்லா பூமி என உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்க  வேண்டும் என்ற நமது கனவு விரைவில் நனவாகும். அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com