அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர்
அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

விருதுநகர் அருகே கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றேர்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள மாத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் சாலை, பாலம் வேலைகள் நடந்து வருவதைக் காரணமாக காட்டி கடந்த 3 மாதமாக பேருந்து கிராமத்திற்குள் வராமல் சூலக்கரையோடு திரும்பிச் சென்று விடுகிறதாம். இதனால்,பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 2 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று அதையடுத்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலையுள்ளது.

தற்போது, பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் இந்த வழித்தடத்தில் அரசு பேருந்தை இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com