விருதுநகர் அருகே மதுக்கடை தொழிலாளியை தாக்கியவர் கைது

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(40). இவர் ஆமத்தூரில் மதுபானக்கடை பாரில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளூர் கிழக்குத்தெருவைச்
Updated on
1 min read

விருதுநகர் அருகே மதுக்கடை பார் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை ஆமத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(40). இவர் ஆமத்தூரில் மதுபானக்கடை பாரில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளூர் கிழக்குத்தெருவைச் சேர்ந்த தர்மர்(36), மாரிச்சாமி ஆகியோர் சில்லரையாக மதுபாட்டில்களை வாங்கி கிராமத்திற்குள் விற்பார்களாம். இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸாரிடம் மதுப்பானக்கடை பார் தொழிலாளி ராமர் தெரிவித்திருக்க கூடும். அதனால், ஞாயிற்றுக்கிழமை மாலையில் மதுக்கடை பாருக்கு வந்த தர்மர், அங்கிருந்த தொழிலாளி ராமரை தகாத வார்த்தைகள் பேசியும் கையாலும், செருப்பாலும் தாக்கினாராம். அதோடு, இருவரும் பாரில் இருந்த நாற்காலிகள் மற்றும் தடுப்புகளையும் நொறுக்கியதோடு, எங்கள் விசயத்தில் தலையிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் ராமர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வெள்ளூரைச் சேர்ந்த மாரிச்சாமி மீது வழக்கு பதிவு செய்தும், அதே கிராமத்தைச் சேர்ந்த தர்மரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com