விருதுநகர் நகராட்சியில் கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்த்த 2 பேர் கைது

விருதுநகர் பாத்திமாநகர் பூங்கா தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(29). எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த நாராயணன்(30). இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் பன்றிகளை கூடாரம்
Updated on
1 min read

விருதுநகர் நகராட்சி பகுதியில் கூடாரம் அமைத்து பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையிலான பன்றிகளை வளர்த்ததாக கூறி இரண்டு பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பாத்திமாநகர் பூங்கா தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(29). எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த நாராயணன்(30). இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் பன்றிகளை கூடாரம் அமைத்து வளர்த்து வந்தார்களாம். இது தொடர்பாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜிடம் புகார் செய்தார்களாம். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த போது பன்றிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விக்னேஷ், நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com