விருதுநகர் அருகே வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: பணம் செலுத்தியவரிடம் போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே வங்கியில் கடனுக்காக செலுத்திய பணத்தில்  ரூ.500ல் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக
Updated on
1 min read

விருதுநகர் அருகே வங்கியில் கடனுக்காக செலுத்திய பணத்தில்  ரூ.500ல் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி நகரின் மத்தியில் தேசிய வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியில் உள்ள ஜவஹர்லால் சாலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் வடிவேல்(58). இவர் தான் வாங்கிய கடனுக்கான தொகையான ரூ.1 லட்சத்தை புதன்கிழமை செலுத்தினாராம். அதை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது ரூ.500 நோட்டுக்களில் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து உடனடியாக வங்கியின் முதன்மை மேலாளர் ரவிக்குமார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வடிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com