செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
Updated on
1 min read

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் வெள்ளிக்கிழமை நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கங்காதரன், பொருளாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் அலுவலர் பி.நாகேந்திரவேல் வரவேற்புரை வழங்கினார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் 330 பேரை தேர்வு செய்தனர்.

இவர்களுக்கான பணி நியமன உத்தரவை அக்கல்லூரியின் செயலாளர் மதன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதிப்பாட பிரிவு இயக்குநர் என்.அசோக்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com