விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் உயிர் கனிம வேதியியலில் இன்றைய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தங்கிற்கு தலைவர் வன்னியராஜன் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் எம்.பழனியாண்டவர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை தலைவர் பி.மணிசங்கர், அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் முருகேசன், காமராஜர் பல்கலைக்கழக பேராசியர் டி,செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்கள். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் 100 பேர் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் பூமிநாதன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ராமன் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.