விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினவிழா

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ணப்புகைப்பட அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினவிழா
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ணப்புகைப்பட அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் வாக்காளிப்பதன் முக்கியத்துவம் கருதி ஆண்டு தோறும் வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர் தினவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு வாக்காளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் குழுவினர், நேரு யுவகேந்திரா, என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ். மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சார்பில் தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

மேலும், இந்த தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை தொகுதி வாரியாக சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் 37 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட 100 பேருக்கு வண்ண புகைப்பட அடையாள அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார். 

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமிி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல் வி.ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சின்னம்மாள், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com