மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகளுக்கு நீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடைக்காலத்தில் யானைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கீடு
Updated on
1 min read

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோடைக்காலத்தில் யானைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் தண்ணீர் தொட்டிகள் அமைக்க ரூ.10 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தாணிப்பாறை, சேத்தூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மரங்கள் மற்றும் விலங்களையும் பாதுகாக்கும் வகையில் வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மழை இல்லாத காலங்களில் இரை தேடியும், தண்ணீருக்காகவும் வன விலங்குகளான யானை, மான், முள்ளம் பன்றி ஆகியவைகள் மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதோடு, அங்குள்ள பயிர்களையும், மரங்களையும் வேரோடு சாய்த்து நாசம் செய்தும் விடுகின்றன. இதனால், விவசாயிகள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்று வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதிகளில் யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் அடிவாரப்பகுதியில் மின்மோட்டார் வசதியுடன் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 150 மீட்டர் இடைவெளியில் தலா ரூ.5 லட்சத்தில் 2 தண்ணீர் தொட்டிகள் வனத்துறை மூலம் மேற்கொள்ள ரூ.10 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மலை அடிவாரப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக வனக்கோட்ட அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com