விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் ரூ.35.28 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் பொருள்களை அனுப்பாமல் ரூ.35.28 லட்சத்தை மோசடி செய்த முகவர்கள் 5 பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து
Updated on
1 min read

விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் பொருள்களை அனுப்பாமல் ரூ.35.28 லட்சத்தை மோசடி செய்த முகவர்கள் 5 பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் பஜார் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தனின் மகன் குறள்ராஜன்(35). இவர் இப்பகுதியில் பருப்பு, கொத்தமல்லி ஆகியவைகளை அரைக்கும் மில் வைத்து  வியாபாரம் செய்து வருகிறார். இதே ஊரில் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் கனகவேல், பஜார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், விக்னேஷ்ராம், குருபிரசாத், அனுமான் நகரைச் சேர்ந்த பவுனராஜ் ஆகியோர் கொத்தமல்லி, பருப்பு ஆகியவைகளை வெளிநாடுகளில் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கும் முகவர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30.6.204 முதல் 12.8.2014 வரையிலான காலகட்டங்களில் குறிப்பிட்ட பொருள்களை வியாபாரத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி வியாபாரி குறள்ராஜனிடம் ரூ.35.28 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.  அதோடு, குறிப்பிட்ட நேரத்தில்  பருப்பு, கொத்தமல்லி ஆகிய பொருள்களை இறக்குமதி செய்து தராமல் 5 பேரும் காலதாமதம் செய்து வந்தார்களாம். பின்னர் பணத்தை கேட்டதற்கும், பொருள்கள் தருவதாக கூறி திருப்பித் தரவும் மறுத்தார்களாம். இந்நிலையில்,  இவர்களால் தன்னுடைய பணம் மோசடி செய்யப்படுவதை அறிந்து ஏமாற்றம் அடைவதை அறிந்து கொண்டார்.

இது தொடர்பாக குறள்ராஜன் புதன்கிழமை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் செய்தார். அதேபோல், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பஜார் காவல் நிலைய போலீஸார் வியாபாரிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறி முகவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com