விருதுநகர் அருகே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல தொந்தரவு செய்ததாக வந்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் உள்பட 3 பேரை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியைகளிடம், ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் கிராம மக்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அக்குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டதோடு கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனுவையும் அளித்தனர்.
இது தொடர்பாக பெண் ஆசிரியைகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தார்களா என்பது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் விசாரணை செய்தனர். அதில் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த ஆசிரியர்கள் மீதான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் அடிப்படையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரசாமி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் உதயசூரியன், பட்டதாரி ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோரை தாற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

