விருதுநகர் அருகே பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் மீது பெண் தொழிலாளி புகார்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தனியாக பணியில் ஈடுபட்டிருந்த போது ஆபாசமாக பேசியதோடு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக ஆலையின் மேற்பார்வையாளர் மீது
Updated on
1 min read

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தனியாக பணியில் ஈடுபட்டிருந்த போது ஆபாசமாக பேசியதோடு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக ஆலையின் மேற்பார்வையாளர் மீது பெண் தொழிலாளி புகார் செய்தார்.

விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி பார்வதி(32). இவர் ஆமத்தூர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். சிவகாசி அருகே சாட்சியாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் என்பவரின் மகன் திரவியம்(31). இவரும் இதே ஆலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றாராம்.

இந்நிலையில் வழக்கம் போல் அந்த ஆலையில் உள்ள ஒர் அறையில் பார்வதி மட்டும் தனியாக புதன்கிழமை வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மேற்பார்வையாளர் திரவியம், பார்வதியிடம் ஆபாசமாக பேசியதோடு, தவறாக நடக்கவும் முயற்சித்துள்ளார். இதையடுத்து, உடனே அங்கிருந்து தப்பி தொழிலாளர்கள் நடமாடும் பகுதிக்கு வந்தாராம். பின்னர் இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் பார்வதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் திரவியம் மீது வழக்கு பதிந்து நடந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com