மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரவேண்டும்: பிரவீன் தொகாடியா

ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற இருக்கிறது. அதில், பங்கேற்பதற்காக வந்த அவர் சாத்தூரில் உள்ள ஆர்.
Updated on
1 min read

மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.

ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற இருக்கிறது. அதில், பங்கேற்பதற்காக வந்த அவர் சாத்தூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் ராமகிருஷ்ணனின் இல்லத்திற்கு வந்தார்.

அப்போது, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பிரவீன் தொகாடியா கூறுகையில், அரசியலமைப்புச் சட்டங்கள் மதமாற்றத்தை அனுமதிப்பது இல்லை. அதோடு, மதமாற்றம் ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். அதனால் இந்து மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் மதமாற்றத்தை எதிர்க்கிறோம். வேணுகோபால் குழுவினரும் தமிழகத்தில் வலுக்கட்டயமாக மதமாற்றம் நடந்து வருவதாகவும் அறிக்கை அளித்துள்ளனர். இதுபோன்ற மதமாற்றத்தை அனுமதிக்க கூடாது என்பதற்காக மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும்.

இந்து மதத்தினர் வணிகம், வர்த்தகம், விவசாயம் போன்றவைகளில் முன்னோடியாகவும், பொருளாதார பாதுகாப்புடனும் இருந்தனர். தற்போது, இவை எல்லாவற்றையும் இழந்துள்ளனர். இவைகளை மீட்டெடுப்பதுதான் இம்மாநாட்டின் நோக்கமாகும். இதுபோன்றவர்களை வழிநடத்துவதற்கும் என்னிடம் திட்டம் உள்ளது. அதேபோல், அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ராமர்கோயில் கட்டுவோம், எப்போது தொடங்குவோம் என்பதும் அனைவருக்கும் தெரியவரும் என்று மட்டும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com