விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் விபத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்பை தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்பாக மேற்கொள்வது தொடர்பாகவும்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் விபத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்பை தவிர்க்கும் வகையிலும், பாதுகாப்பாக மேற்கொள்வது தொடர்பாகவும் மேற்பார்வையாளர்கள், மருந்து கலவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு பயிற்சி முகாம் பிப்.4-ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தனியார் பட்டாசு ஆலைகளில் எதிர்பாரத வெடி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், பாதுகாப்புடன் பணியாற்றவும் மேற்பார்வையாளர்கள், மருந்து கலவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 1 வாரம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதில், பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை பின்பற்றியும், கவனமுடன் மருந்து கலவைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விவரமாக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இப்பயிற்சி முகாம் விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள காளீஸ்வரி கலைக்கல்லூரியில் பிப்.4-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 7 நாள்கள் வரையில்

இம்முகாம் நடைபெற இருக்கிறது. இதேபோல், கடந்தாண்டு பல்வேறு கட்டங்களில் இம்மையம் சார்பில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் ஆலைகளில் விபத்து குறைந்தது. இதேபோல், தனியார் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் தங்கள் ஆலைகளில் பணியாற்றி வரும் மேற்குறிப்பிட்ட பணியாளர்களை பயிற்சிக்கு அனுப்பி பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com