

கோடியக்கரைக்கு அப்பால் மீன்பிடித்த நாகை செருதூர் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி,மீன்படி சாதனங்களை சேதப்படுத்தியதோடு,பொருள்களை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் இன்று பிற்பகல் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில்,34 படகுகளில் இருந்த 20 மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் தங்கராசு என்ற மீனவருக்கு காயம் ஏற்பட்டது.
15 டன் எடையுள்ள வலைகளை இலங்கை மீனவர்கள் சேதப்படுத்தியதோடு,ஜிபிஎஸ் கருவிகள்,செல்பேசி போன்றவைகளை இலங்கை மீனவர்கள் பறி்த்துச் சென்றதாக மீனவர்கள் அளித்துள்ள புகாரில் தெரிவித்தனர். இது குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.