விருதுநகரில் 4 வழிச்சாலையில் புறக்காவல் நிலையம் தொடக்கம்

விருதுநகரில் 4 வழிச்சாலையில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையிலான புறக்காவல் நிலையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகரில் 4 வழிச்சாலையில் வாகன விபத்துக்களை தடுக்கும் வகையிலான புறக்காவல் நிலையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்புறக்காவல் நிலையத்தின் தொடக்க விழாவிற்கு காவல்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

மேலும், இக்குறிப்பிட்ட இடத்தில் புறக்காவல் நிலையத்தின் மூலம் 4 வழிச்சாலையில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தவும், விபத்து நடந்தாலும் உடனடியாக உதவி கிடைக்க வாய்ப்பாக அமையும் என்றார்.

இதில், நகராட்சி ஆணையாளர் முஜிபூர்ரகுமான், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் சதீஷ், நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ்,  கூரைக்குண்டு ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.ஜெயபால், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கஜேந்திரன், வாடியான்பாலன், டி.ஜி.நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், புறக்காவல் நிலையத்தை சுற்றிலும் நிழல் ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகளையும் வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் புகழ் வளர்ச்சி மன்றம், கூரைக்குண்டு கிராம நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com