செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பிய 4 பேர் திண்டுக்கல்லில் மீட்பு

ாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே சிறுவர்களுக்கான அரசு சிறப்பு இல்லம் உள்ளது.

ாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே சிறுவர்களுக்கான அரசு சிறப்பு இல்லம் உள்ளது.

இங்கு தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு தங்கியிருந்த 17 சிறுவர்களை ஞாயிற்றுக்கிழமை மதியம் காணவில்லை. விசாரணையில் அவர்கள் சிறப்பு இல்லத்திலிருந்து தப்பியது தெரியவந்தது.  தகவலறிந்த சிறப்பு இல்லத்தின் பொறுப்பாளர் ராமநாதன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, சிறுவர் சிறப்பு இல்லத்துக்கு உயர் அதிகாரிகள் சென்று நேரில் விசாரணை நடத்தனர். அவர்கள் எப்படி தப்பிச் சென்றனர், எங்கு சென்றிருப்பார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் தாடிக் கொம்பு பகுதியில் 4 பேரை போலீஸார் மீட்டனர். நேற்று தப்பிச்சென்ற 17 பேரில் 4 பேர் சென்னை எக்மோரில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரயிலில் திண்டுக்கல் வந்தனர்.

அதில் ஒருவன் திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு பகுதியில் ஒரு நூற்பாலையில் பணிபுரியும் தன் தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் அந்த 4 பேரையும் இன்று மீட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com