வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோ?

மணி ரத்னம் - கார்த்தி கூட்டணி பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News image
Updated On :6 ஜூலை 2015, 7:06 am

மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஓகே கண்மணிக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளார். ஆனால், படம் தொடர்பான எந்தத் தகவல்களையும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாலும் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மணி ரத்னம் - கார்த்தி கூட்டணி பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே கதையை மலையாளத்திலும் எடுக்க மணி ரத்னம் முடிவெடுத்துள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார்.

மணி ரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.