விருதுநகரில் மாமனார் உளியால் தாக்கியதில் புதுமாப்பிள்ளை சாவு

விருதுநகரில் மாமனார் கல் உடைக்கும் உளியால் புதுமாப்பிள்ளையை தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகரில் மாமனார் கல் உடைக்கும் உளியால் புதுமாப்பிள்ளையை தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த சந்திரசேகரனின் மகன் கருப்பசாமி(30). இவரது தாய்மாமன் நாராயணனின் மகள் காளீஸ்வரிக்கும் கடந்த மாதம் 29ம் தேதி பெரியபேட்டை தெருவில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், வீட்டிற்கு வந்த இடத்தில் நாராயணனுக்கும், அவரது மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை மருமகன் கருப்பசாமி தகராறை விலக்கிவிட்டு, முத்துலட்சுமிக்கு ஆதரவாக பேசிவிட்டு அவரது வீட்டை நோக்கி நடந்து சென்றாராம்.

இதில் ஆத்திரம் அடைந்த நாராயணன் கையில் வைத்திருந்த கல்உடைக்கும் உளியால் மருமகன் கருப்பசாமியின் கழுத்தில் குத்தினாராம். இதில், பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக புதுமாப்பிள்ளையின் தந்தை சந்திரசேகரன் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாமனார் நாராயணனை போலீஸார் கைது செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com