அருந்தவம்புலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள்,சிறுவர்கள் முற்றுகை

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலம் கடைவீதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி மகளிர்குழு பெண்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர்.
அருந்தவம்புலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள்,சிறுவர்கள் முற்றுகை
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலம் கடைவீதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி மகளிர்குழு பெண்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர்.

அருந்தவம்புலத்தில் செயல்படும் டாய்மாக் கடை (எண்:5725) பொது மக்களுக்கு இடையூரு அளிப்பதாக கூறி,அதனை அகற்றக்கோரி பொது மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த மே மாதம் 26-ம் தேதி அந்த பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி,ஜூலை 10-ம் தேதிக்குள் கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தனர்.ஆனால்,குறிப்பிட்ட தேதியில் (வெள்ளிக்கிழமை)நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில்,சனிக்கிழமை காலை பத்து மணிக்கு திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கடையை முற்றுக்கையிட்டு அமர்ந்தனர்.லதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான மகளிர் குழு உறுப்பினர்கள்,சிறுவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com