குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்க முதல்வர் சித்தராமையா ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.
இந்திய மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மேகாலயா மாநிலத்தின் ஷிலாங் நகரில் ஜூலை 27-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வியாழக்கிழமை(ஜூலை 30)காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு கர்நாடக அரசு சார்பில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் இருந்து புதன்கிழமை மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் முதல்வர் சித்தராமையா, அங்கு அப்துல் கலாமுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு அன்று இரவே பெங்களூரு திரும்புகிறார் என்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துக்கம் அனுசரிப்பு:
அப்துல்கலாமின் மறைவையொட்டி கர்நாடக அரசு சார்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 3 நாள்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதோடு, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.