உணவு மாதிரி எடுக்கவிடாமல்: சுகாதார ஆய்வாளர்களை தடுத்த அங்காடி உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை

விருதுநகர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களை உணவு மாதிரி பொருள்கள் எடுக்க விடாமல் தடுத்த அங்காடி உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

விருதுநகர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களை உணவு மாதிரி பொருள்கள் எடுக்க விடாமல் தடுத்த அங்காடி உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக வெங்கடேஷ் மற்றும் மோகன்குமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள், கடந்த 27.1.2011 அன்று  பஜாரில் உள்ள உணவு பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் அங்காடியில் மாதிரி எடுக்கச் சென்ற போது உரிமையாளர் செல்வக்குமார் தடுத்தார்.

அதைத் தொடர்ந்து அவரது உறவினரும், அப்போதைய அதிமுக நகர செயலாளருமான சிம்னி அசோகனும் சேர்ந்து அங்காடிக்குள் சுகாதார அதிகாரிகளை பூட்டி 2 மணி நேரம் வரை சிறை வைத்தனர். பின்னர் இது தொடர்பாக பஜார் காவல் துறையினர் தகவல் அறிந்து பேச்சு வார்த்தை நடத்திய பின் சுகாதார ஆய்வாளர்களை மீட்டனர்.

இது தொடர்பாக அப்போதைய நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) நடராஜனிடம் சுகாதார அதிகாரிகள் புகார் மனு அளித்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றம் ஜே.எம்.1ல் திங்கள்கிழமை நீதிபதி அசன்முஹம்மது முன்னிலைவியில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அங்காடி உரிமையாளர் செல்வகுமாருக்கு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டு சிறைதண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com