பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24,25 ஆகிய நாள்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக
Updated on
1 min read

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24,25 ஆகிய நாள்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் து.கே.பொன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏற்கனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர் ஆகியோரிடம் பல்வேறு முறை கோரிக்கை முறையீடு அளிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து மண்டல அளவிலான தர்ணா போராட்டம், மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் உள்ளோம். இதை கண்டுகொள்ளாத காரணத்தால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் வரையில் மேற்குறிபபிட்ட நாள்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com