விருதுநகர் அருகே விஷ மருந்து அருந்திய இளைஞர் சாவு

விருதுநகர் அருகே விஷமருந்து அருந்திய இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே விஷமருந்து அருந்திய இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முத்தானந்தம்(50). இவரது தம்பி ஈஸ்வரன்(31). இவர் மனநிலை சரியில்லாத நிலையில் அலைந்து கொண்டிருப்பாராம். அதனால் சகோதரர் வீட்டிற்கு அழைத்து வந்து பாதுகாத்து வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிகளுக்காக வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து சகோதரரிடம் தெரிவித்துள்ளனர்.  உடனே ஆபத்தான நிலையில் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஈஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலையில் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் முத்தானந்தம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com