விருதுநகரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தா.மா.கவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தா.மா.க சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
Updated on
1 min read

விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தா.மா.க சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   
   
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட தலைவர் அரசன்  ஜி.வி.கார்த்திக் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியன் முனனிலையில் பூரண மதுவிலக்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகோபால் சிறப்புரையாற்றி பேசுகையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அதோடு,  இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மாதவராவ், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.சி.அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள்  எ.ஞானசேகரன், ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com